இந்தியா

போக்கோ M3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

EllusamyKarthik

இந்தியாவில் விரைவில் போக்கோ M3 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது. இதை யூடியூப் வீடியோ மூலம் உறுதி செய்து வருகிறது அந்நிறுவனம். சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகமாகியிருந்த இந்த போன் விரைவில் இந்தியாவிலும் வெளியாக உள்ளது.

ஸ்நாப்டிராகன் 662 சிப்செட், 48 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமிரா, ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 மில்லியாம்ப் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அந்த வீடியோவில் இந்த போன் எப்போது வெளியாகிறது என்ற தேதி வெளியாகாத நிலையில் வரும் பிப்ரவரியில் இந்த போன் வெளியாகும் என சொல்கின்றனர் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள். 

4ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் மெமரி என அசத்துகிறது போக்கோ M3. டைப் சி சார்ஜிங் போர்ட் வசதி இதில் இடம்பெற்றுள்ளது.