இந்தியா

சமூக வலைத்தளங்களுக்கு குட்-பை சொல்லும் மோடி? ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

சமூக வலைத்தளங்களுக்கு குட்-பை சொல்லும் மோடி? ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

webteam

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். அதற்கு ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அடுத்தப்படியாக சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்வோரை கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. ட்விட்டரில் மட்டும் பிரதமர் மோடியை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து தாம் தீவிரமாக யோசித்து வருவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டிருந்தார். இதனிடையே பிரதமரின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் உண்மையிலேயே கைவிட வேண்டியது வெறுப்புணர்வைத்தானே தவிர, சமூக வலைத்தளங்களை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சமூக‌வலைத்‌தளங்‌களில் ‌இருந்து‌ பிரதமர் வெளியே‌‌ற வேண்டாம் என்பதை ‌வலியுறுத்தும் ‌வகையில்‌ ‘நோ சார்‌‌‌‌’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்‌‌‌ளது. அதேபோல, சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கி இருங்கள் என சிலரும் பதிவிட்டு வருகின்றனர்.