இந்தியா

கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? - பிரதமர் மோடி சொன்ன குறிப்புகள்!

கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? - பிரதமர் மோடி சொன்ன குறிப்புகள்!

webteam

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அப்போது, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகளை மோடி தெரிவித்தார்.

  • உங்கள் வீட்டில் உள்ள மூத்த குடிமக்களை, குறிப்பாக அடிப்படை பிரச்சனைகள் உள்ளவர்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்.
  • ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை வீட்டில் தயாரித்தே அணிந்து கொள்ளலாம்
  • ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்
  • Aarogya Setu செயலியை பதிவிறக்கம் செய்து கொரோனா பரவல் குறித்து தெரிந்து கொண்டு பரவலை தடுக்கலாம்
  • முடிந்தவரை ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள்
  • உங்கள் வணிகங்களில், உங்கள் சக ஊழியர்களுக்கு உதவுங்கள். ஆட்குறைப்பு செய்யாதீர்கள்
  • கொரோனா வைரஸை எதிர்த்து நிற்கும் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை மதியுங்கள்