இந்தியா

திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாடு... தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

webteam

திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்திய அறிவியல் சங்கத்தின் சார்பில் இந்த மாநாடு ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் சுமார் 14 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ளனர். நோபல் பரிசு பெற்ற 6 பேர் உள்ளிட்ட வெளிநாட்டு விஞ்ஞானிகளும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு என்பதை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய பிறகு, திருப்பதி கோயிலில் பிரதமர் தரிசனம் செய்யவுள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது