இந்தியா

மழைநீர் சேகரிப்புக்கு வழிகாட்டும் தமிழகம்: பிரதமர் மோடி பாராட்டு

மழைநீர் சேகரிப்புக்கு வழிகாட்டும் தமிழகம்: பிரதமர் மோடி பாராட்டு

Rasus

மழைநீர் சேகரிப்புக்கு கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதுமையான யோசனை தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இம்மாதத்துக்கான நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு தமது உரையை தொடங்கினார்.

அப்போது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற புதுமையான யோசனையை தமிழகம் செயல்படுத்தி வருவதாக பிரதமர் பாராட்டினார். தேசிய விளையாட்டுப் போட்டிகள், வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கு மட்டுமின்றி, பிற மாநில வீரர்களுடன் பழகுவதற்கும், அவர்களது கலாசாரங்களை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைகிறது என தெரிவித்தார்.

இதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் கூறினார். இதில் நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.