இந்தியா

வெங்கையா நாயுடுவைச் சந்தித்தார் பிரதமர் மோடி

webteam

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று காலை சந்தித்தார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. 303 இடங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 வது மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பாஜக. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக. நாடாளுமன்றக் குழுத் தலைவ ராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை குடியரசு தலைவரிடம் பாஜக தலைவர் அமித்ஷா வழங்கினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார். அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி 30 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி இன்று காலை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.