இந்தியா

இந்திய அரசு மீது 73 சதவீதம் பேர் நம்பிக்கை வைத்துள்ளனர்: ஆய்வில் தகவல்

webteam

அரசு மீது வைத்திருக்கும் மக்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் இந்தியாவிற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பான ஒரு ஆய்வு இந்தியாவில் 73 சதவீதம் பேர் அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஆர்கனைஷேசன் ஃபார் எக்னாமிக் கோ ஆபரேஷன் அண்ட் டெவலப்மெண்ட் (ஒஇசிடி) என்ற அமைப்பு ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்தந்த நாட்டு அரசு மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆய்வை நடத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அரசு மீது அந்நாட்டு மக்கள் 82 சதவீதம் பேர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதே சதவீதத்தை பெற்று இந்தோனேஷியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 
இந்தியாவைப் பொருத்தவரையில் 73 சதவீதம் பேர் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் பெற்ற லக்சம்பர்க் நான்காவது இடத்திலும் 66 பெற்ற நார்வே 5வது இடத்திலும் உள்ளன. மேலும் 64 சதவீதம் பெற்றுள்ள கனடா 6 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. துருக்கிக்கு 56 சதவிதம் நியூசிலாந்துக்கு 56 சதவீதம் ஜெர்மனிக்கு 53 சதவீதம் கிடைத்துள்ளன. 49 சதவீதம் பெற்ற பின்லாந்து 10வது இடத்தில் உள்ளது.
சர்வதேச பொருளாதார சபை அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.