இந்தியா

முதலீட்டை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி

முதலீட்டை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி

webteam

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு முதலீடுகளை வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.

குடியரசு தினவிழாவில் பங்கேற்க அபுதாபி இளவரசர் முகமது பின் சையது அல் நயீன் வந்துள்ளார். இருவரும் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான 14 ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் அபுதாபி இளவரசரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய மோடி, நமது சமூகத்தைப் பாதுகாக்க வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக கூறினார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளிடையேயான உறவில் புதிய பரிமாணத்தை வளர்த்திருக்கிறது என்றும் இந்த உறவை மேலும் விரிவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முக்கியமான பங்குதாரர் எனத் தெரிவித்த மோடி, இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டை வரவேற்பதாகவும் மோடி தெரிவித்தார்.