பிரதமர் நரேந்திர மோடி முகநூல்
இந்தியா

3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர்!

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.

PT WEB

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்பை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகிவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டார்.

டெலவர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் மோதல், மேற்கு ஆசிய பதற்ற சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐ. நா. சபை உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.