பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நாளை தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இந்த உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க வுள்ளனர். இதைத் தொடர்ந்து வர்த்தகம், முதலீடுகள் உள்பட பல்வேறு துறைகளில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இது ஆறாவது முறையாகும்.