விஜயதசமி தினத்தையொட்டி பாதுகாப்பு துறை சார்ந்த 7 புதிய நிறுனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்த ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை ஏழு நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மர்ட் வெஹிகல்ஸ் நிகம் லிமிடெட் அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் மற்றும் எகியூப்மென்ட் இந்தியா லிமிடெட் ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் யந்த்ரா இந்தியா லிமிடெட் இந்தியா ஆப்டெல் லிமிடெட் மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயல்திறன், புதிய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை இந்த ஏழு நிறுவனங்களும் முன்னெடுக்கவுள்ளன. இந்நிறுவனங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.