இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..!

webteam

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்துள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். நிதி ஆயோக்கின் 5வது பொது கூட்டம் இதுவாகும். 

இந்தக் கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, வறட்சியை மேற்கொள்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, நாட்டின் பாதுகாப்பு, இடதுசாரி பயங்கரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து  ஆலோசிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதலமைச்சர் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.