இந்தியா

விமானப்படையின் 30 ஆயிரம் கோடியை திருடி அம்பானிக்கு வழங்கியவர் மோடி - ராகுல்

விமானப்படையின் 30 ஆயிரம் கோடியை திருடி அம்பானிக்கு வழங்கியவர் மோடி - ராகுல்

webteam

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச ஊதியம் ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்த முயன்றதாகக் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மூலம் திருத்துவதற்கு பாஜக முயன்று வருவதாக ராகுல் தெரிவித்தார். 

இந்திய விமானப்படை நாட்டை பாதுகாக்கிறது. ஆனால் மோடி அவர்களின் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பையை நிரப்பி வருவதாக ராகுல் குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச ஊதியம் ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என ராகுல் உறுதியளித்தார். தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி, விவசாயிகள், மாணவர்கள், சிறுவணிகர்களின் ‌கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.