பிரதமர் மோடி pt web
இந்தியா

”வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது காங்கிரஸ்” - ராகுலைக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் பர்தமான் - துர்காபூரில் இன்று (மே 3) நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராகுல் காந்தி ரேபரேலியில் களமிறக்கப்பட்டுள்ளது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது. வாக்குக்காகச் சமூகத்தைப் பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது. அதை i-n-d-i-a கூட்டணியும் ஆதரிக்கிறது. அரசியலமைப்பை மாற்றவும், பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பறிக்கவும், ஜிகாதி வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு காங்கிரசுக்கு நான் சவால் விடுத்தேன். ஆனால் அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo

காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) மிகவும் பயந்து போய் இருக்கிறார். அவர், அமேதி தொகுதியைப் பார்த்து அங்கு போட்டியிடாமல் பயந்து ஓடி விட்டார். தற்போது அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரதமர் மோடி - எம்.பி ராகுல் காந்தி

அமேதியில் போட்டியிட பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார். ராகுல் காந்தி ஏற்கெனவே தோல்வி பயத்தில் உள்ளார். இதனால்தான் அவர் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். 'அச்சப்பட வேண்டாம். ஓடி, ஒளிய வேண்டாம்' என நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: ரேபரேலி தொகுதியில் ட்விஸ்ட்! ராகுலுக்கு சீட்.. பிரியங்கா களமிறங்காதது ஏன்? காங். போடும் கணக்கு என்ன?