பிரதமர் மோடி, ஜி20 மாநாடு pt web
இந்தியா

”நம்மைச் சுற்றி இன்னும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கு”-ஜி20 மாநாட்டில் பட்டியலிட்டு பேசிய பிரதமர் மோடி!

”வளமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்று G20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

PT WEB

ஜி 20 உச்சி மாநாட்டில் தனது முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி

”COVID தொற்றுநோயைத் தொடர்ந்து, உலகம் நம்பிக்கை பற்றாக்குறையின் புதிய சவாலை எதிர்கொண்டது, துரதிர்ஷ்டவசமாக, போர்கள் இதை மேலும் ஆழமாக்கியுள்ளன. இந்த நம்பிக்கை பற்றாக்குறையின் சவாலையும் நாம் வெல்ல முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனித குலத்தின் மிகப்பெரிய ஆபத்தாக வந்த கொரோனா பெருந்தொற்றை நாம் இப்படித்தான் தோற்கடித்தோம். ஜி 20 தலைவர் என்ற முறையில், இந்த உலகளாவிய கூட்டமைப்பின் மூலம் பற்றாக்குறையை நம்பிக்கையை புதிய நம்பிக்கையாக மாற்ற இந்தியா என்ற நாடு முழு உலகையும் அழைக்கிறது.

அனைத்து மக்களுக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி என்பது தான் இந்தியாவின் கொள்கை. இதை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். இதே எண்ணத்தில் தான் ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினர் உரிமையை இந்தியா வழங்க முன்வந்தது. உங்கள் அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரை G20 இன் நிரந்தர உறுப்பினராக இருக்க அழைக்கிறேன்.” என பிரதமர் பேசினார்.

மேலும், “உலகப் பொருளாதாரத்தின் எழுச்சி தொடங்கி உணவு மேலாண்மை முதல் எரிபொருள் மற்றும் உர மேலாண்மை பயங்கரவாதத்திலிருந்து இணையப் பாதுகாப்பு , ஆரோக்கியம் முதல் ஆற்றல் மற்றும் நீர் பாதுகாப்பு வரை அனைத்து சவால்களுக்கும், நாம் உறுதியான பாதையை நோக்கி நகர வேண்டும்.

கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த மாநாட்டில் இணைந்தனர், நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா இதனை மக்கள் மாநாடாகவே நடத்தியது. வளமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றும் பேசினார்.