தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையத்துடன் இணைத்து மக்கள் படித்து பயன்பெறும் வகையில் நூலகமும் நடத்தி வருகிறார் பொன்.மாரியப்பன்.
மாரியப்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய மான் கிபாத் உரையின் முழுமையான தொகுப்பு...
பிரதமர்: பொன்.மாரியப்பன் ஜி வணக்கம், நல்லா இருக்கீங்களா?
மாரியப்பன்: மாண்புமிகு பிரதம மந்திரிக்கு வணக்கம்.
பிரதமர்:வணக்கம் வணக்கம், உங்களுக்கு இந்த லைப்ரரி ஐடியா எப்படி வந்தது?
மாரியப்பன்: நான் எட்டாம் வகுப்புதான் படித்துள்ளேன். மேற்கொண்டு எங்கள் குடும்ப சூழ்நிலைக் காரணமாக படிக்க முடியவில்லை. படிச்சவங்கள பார்க்கும்போது எனக்குள்ள ஒரு வருத்தம் இருக்கும். நாமளும் ஒரு நூலகத்தை உருவாக்கி வாழ்க்கையை படிக்கணும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்தேன்.
பிரதமர்: உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும்?
மாரியப்பன்: எனக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும்.
பிரதமர்: ஒ… உங்ககிட்ட பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்
மாரியப்பன்: எனக்கும் மாண்புமிகு பிரதமர் ஐயாவிடம் பேசுவது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரதமர்: மீண்டும் நல்வாழ்த்துகள்
மாரியப்பன்: நன்றிங்கய்யா!
பிரதமர்: நன்றி
இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி “ நாம் இப்போது மாரியப்பனுடன் பேசினோம். இப்போது பாருங்கள் அவர் மக்களின் தலைமுடியை அலங்கரிக்கிறார், அத்துடன் அவர்களுடைய வாழ்க்கையையும் அலங்கரிக்க அவர் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார். திருக்குறளின் பெருமையைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது திருக்குறள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அனைவரும் திருக்குறளை படிக்கவேண்டும், இது வாழ்க்கைக்கு வழிகாட்டும்” என தெரிவித்தார்.