உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் துலே-வில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ”காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. பாகிஸ்தானின் மொழியில் பேசி வருகின்றன. அம்பேத்கர் இயற்றிய சட்டம் மட்டும்தான் காஷ்மீரில் செல்லுபடியாகும். காங்கிரஸ் கட்சி முன்பு மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது.
தற்போது பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர் இடையிலான ஒற்றுமையை சிதைக்க அக்கட்சி முற்பட்டுள்ளது. இந்தியா ஈர்த்துள்ள அந்நிய முதலீடுகளில் பாதி மகாராஷ்டிராவுக்கு மட்டுமே வந்துள்ளது. இதற்கு எங்கள் கூட்டணி ஆட்சியே காரணம்” என்று கூறினார்.