இந்தியா

தேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி

தேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி

webteam

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஊழல் கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கோவாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா வாக்குச்சாவடி மட்டத்திலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதாவிற்கு எதிராக திரண்டிருப்பதை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி எதிர்மறையானது என்று கூறினார். 

எதிர்க்கட்சிகளிடம் பணபலம் உள்ளது என்றும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியிடம் மக்கள் பலம் உள்ளது என கூறினார். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு எதிர்கட்சியினரின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இதனால் பொய்களையும், வதந்திகளையும் எதிர்க்கட்சியினர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக, கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மமதா பேனர்ஜி தலைமையில் மாநிலத் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து மாநில தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.