இந்தியா

மத்திய பட்ஜெட் இளைஞர்களுக்கும், கல்வித்துறைக்கும் ஏற்றத்தை வழங்கும் - பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் இளைஞர்களுக்கும், கல்வித்துறைக்கும் ஏற்றத்தை வழங்கும் - பிரதமர் மோடி

webteam

தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இளைஞர்களுக்கும், கல்வித்துறைக்கும் ஏற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு துரை ரீதியாக பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கல்வித்துறை சார்ந்த இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அவர்களது திறமையை ஊக்குவிக்கும் வண்ணமாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் புதிய தொழில்நுட்பங்கள் புதிய கல்விமுறைக்கு வழி வகுத்துள்ளது என்றும், ஆசிரியர்களிடம் புதிய அணுகுமுறைக்கான முழு ஒத்துழைப்பு கிடைத்தது. இது கல்வித்துறையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை அரசு கொண்டு வருவதற்கு உத்வேகமாக இருந்தது என்றும் பிரதமர் பேசினார்.

மேலும் இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், புதிய கல்விக் கொள்கை நாட்டின் ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையே மாற்றி அமைத்திருப்பதாகவும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவை அமைந்திருப்பதாகவும் பிரதமர் பேசினார். மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை சார்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி இவையெல்லாம் எதிர்காலத்தில் உலக அளவில் திறமைக்கான தலைநகரமாக இந்தியா மாறுவதற்கான வழிவகையை ஏற்படுத்தும் என தான் நம்புவதாகவும் கூறினார்.