இந்தியா

`பெட்ரோல் டீசல் உயர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களே காரணம்’- பிரதமர் மோடி விளக்கம்

`பெட்ரோல் டீசல் உயர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களே காரணம்’- பிரதமர் மோடி விளக்கம்

நிவேதா ஜெகராஜா

`தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக சந்தித்தார். அப்போது பேசிய அவர், `கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்ததுபோல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. வாட் வரியை குறைக்காமல் மாநில மக்களை கூடுதல் சுமைக்கு ஆளாக்குகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது’ என்று பேசினார்.

பின்னர் பேசுகையில், `கோடைக்காலம் என்பதால், மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மாநிலங்கள் ஆய்வு செய்யவேண்டும்’ என்றார். முன்னதாக இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவுறுத்தல்களை தொடர்ந்து, `நாட்டில் குழந்தைகள் மத்தியிலான கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 6-12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்குகிறது’ என்று கூறினார்.