மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்கள் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு செல்வதாக சோனியா காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்றவர்கள் மாநிலப் பிரச்சனைக்கு என்றாவது குரல் கொடுத்தது உண்டா என கேள்வி எழுப்பினார்.
மேலும் இது குறித்து விமர்சித்த பிரதமர் மோடி, “வலிமையான இந்தியாவை காங்கிரஸால் உருவாக்க முடியாது. நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்றார். அவரை என்றாவது நீங்கள் சந்தித்தது உண்டா?...
தற்போது இன்னோரு காங்கிரஸ் தலைவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்றுள்ளார். தேர்தலை சந்திக்க முடியாமல் இந்த வழியை தேர்வு செய்துள்ளார்.” என்று சோனியா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி அவரை சாடியுள்ளார்.