இந்தியா

"மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு வழி வகுக்கும் புதிய கல்விக்கொள்கை" பிரதமர் மோடி

jagadeesh

புதிய கல்விக் கொள்கையால் இந்தியாவின் மொழிகள் முன்னேறி மேலும் மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக் கொள்கை குறித்து பேசிய பிரதமர் மோடி "புதிய கல்விக் கொள்கையால் இந்தியாவின் மொழிகள் முன்னேறி மேலும் மேம்படும். அந்தந்த மாநில மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க புதிய கல்விக்கொள்கை மூலம் வழிவகை செய்ய முடியும். வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலையை உருவாக்குவோரை புதிய கல்விக்கொள்கை உருவாக்கும்" என்றார்.

மேலும் "புதிய கல்விக்கொள்கை, மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது.தாய்மொழி மூலம் படித்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது ; அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் மோடி.

தொடர்ந்து பேசிய பிரதமர் "இந்தியாவின் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன" என கூறினார்