இந்தியா

ரா, ஐபி அமைப்புகளுக்கு தலைவர்களை நியமித்தார் பிரதமர் மோடி

ரா, ஐபி அமைப்புகளுக்கு தலைவர்களை நியமித்தார் பிரதமர் மோடி

webteam

‘ரா’ (RAW) எனப்படும் மத்திய அரசின் வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிக்கும் பிரிவின் தலைவராக சமந்த் கோயலை பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ளார். 

சமந்த் கோயல் 1984ம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.‌ கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில்‌ நடந்த இந்திய விமானப்‌ படைத் தாக்குதல்‌ மற்றும் 2016ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990களில் பஞ்சாப்பில் ‌தலைவிரித்தாடிய பயங்கரவாத செயல்களை அ‌டக்கியதில் சமந்த் கோயலுக்கும் பங்கு உண்டு. இவரை ரா பிரிவின் தலைவராக பிரதமர் நியமித்துள்ளார்.

அத்துடன் ஐபி (IB) என‌ப்படும் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  அரவிந்த் குமார் 1984ம் ஆண்டு அசாம் - மேகாலயா பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். நக்சல் வி‌வகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையாள்வதில் இவர் நிபுணர் எனக் கூறப்படுகிறது.