பிரதமர் மோடி pt web
இந்தியா

“MGR-க்கு பிறகு சிறப்பான ஆட்சியை கொடுத்தார் ஜெயலலிதா” - பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச்சு!

என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “MGRக்கு பிறகு சிறப்பான ஆட்சியை கொடுத்தார் ஜெயலலிதா” என தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இதனையடுத்து 'என் மண் என் மக்கள் பாதயாத்திரை' நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பல்லடம் மாநாட்டு திடலுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை புரிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “அரசியல் சரித்திரத்தில் அமர்ந்து இருக்கிறோம். நாம் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. நம் பணி இன்னும் 60 நாள்கள் இருக்கிறது.

”தமிழ் மண்ணோடு பல காலமாக பிண்ணி பிணைந்துள்ளேன்”

தமிழ்நாடு 2024 இல் புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது. அதற்கு என் மண் என் மக்கள் சான்றாக உள்ளது. மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பை கொடுத்து உள்ளீர்கள். தமிழ் மொழியும் பண்பாடும் என் மனதிற்கு நெருக்கமானது. காசி தமிழ் சங்கத்தையும் நடத்தி காட்டி உள்ளேன். நாடாளுமன்றத்தில் செங்கோலை உயர்த்தி உள்ளேன். தமிழ் மண்ணோடு பல காலமாக பிண்ணி பிணைந்துள்ளேன்.

Article 370 அரசியல் சாசனத்தை குப்பையில் வீசி வரலாற்று சாதனை செய்துள்ளோம். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால் பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது.

”MGRஐ திமுக கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது”

கொள்ளையர்கள் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து மக்களை பிரித்து நாற்காலியை காப்பாற்றி கொள்ள பொய்களை சொல்லிகொண்டு இருக்கின்றனர். அவர்களின் கபடநாடகம் வெளியே வந்து விட்டது. ஊழல்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. 2004 - 2014 வரை காங்கிரஸ் கொடுத்ததை விட 3 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டிற்கு தற்போது பாஜக கொடுக்கிறது.

நான் ஏழைகளுக்காக உழைத்து வருகிறேன். மோடி உத்திரவாதம் என்பது பல ஆண்டுகளுக்கு தொடரும். நாடு வளரும் அதே வேகத்தில் தமிழ்நாடும் வளரும் என்பதே மோடியின் உத்தரவாதம். MGRக்கு பிறகு ஜெயலலிதா தான் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். MGRஐ திமுக கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

”புதிய பாரத்தை உருவாக்க பாடுபட்டு கொண்டு உள்ளோம்”

இந்திய கூட்டணி தமிழ்நாட்டை கைப்பற்றி விட்டால் தமிழகத்திற்கு வளர்ச்சி இருக்காது. பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியத்தில் மோசடி செய்த அவர்கள் இங்கு defence corridor வர விடுவார்களா?. புதிய பாரத்தை உருவாக்க பாடுபட்டு கொண்டு உள்ளோம். விவசாயம், மீனவர்கள், தொழில் துறைக்கான வளர்ச்சியை நாம் கொடுத்து வருகிறோம்.

இந்தியா கூட்டணி ஜெயிக்கது என தெரிந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் தான் கொள்ளை அடிக்க திட்டமிட்டு கொண்டு உள்ளார்கள். அவர்கள் கடைக்கு பூட்டு போட வேண்டும். இளைஞர்களுக்கா உத்திரவாதம், பாதுகாப்புக்கான உத்திரவாதம் உள்ளது” என பேசினார்.