மான்கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகாகவி பாரதியின் பாடலை பாடி மொழியின் சிறப்புக் குறித்து பேசினார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று பேசிய பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினார். இந்திய நாட்டின் கலாசாரம், மொழி குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், மொழியின் சிறப்பு குறித்து விளக்குவதற்காக மகாகவி பாரதியின் பாடலை பாடி மேற்கோள் காட்டினார். அதில்
அதில், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் புலவர் பாரதியார் மொழி குறித்து பாடியுள்ளார். இந்தியாவிற்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று மட்டுமே என்றும், 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என்று பாரதி கூறியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
மேலும் பாரதியின் கவிதையான
''முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்''
என்பதையும் தமிழில் மோடி மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.