உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி pt web
இந்தியா

ஆரத்தழுவி வரவேற்ற செலன்ஸ்கி... உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி

Angeshwar G

போலந்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ரயில் ஃபோர்ஸ் ஒன் ரயில் மூலம் பத்து மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ்வை அடைந்தார் பிரதமர் மோடி. அங்குள்ள இந்திய மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்று ரஷ்யா- உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு; பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார் செலன்ஸ்கி

இதையடுத்து அவர் மரின்ஸ்கி மாளிகைக்கு சென்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை சந்தித்தார். அவரை செலன்ஸ்கி ஆரத் தழுவி வரவேற்றார். இதைத்தொடந்து இரண்டு தலைவர்களும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக போலந்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.