modi cabinet x page
இந்தியா

மத்தியஅமைச்சரவை பட்டியல்|யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமராக நரேந்திர மோடி, நேற்று மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 மத்திய அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் 30 கேபினெட் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அதாவது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி, நேற்று மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 30 கேபினெட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கான துறை குறித்த விவரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

1. பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்

2. உள்துறை, கூட்டுறவுத்துறை - அமித் ஷா

3. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை - நிதின் கட்கரி

4. சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை - ஜே.பி.நட்டா

5. வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை - சிவ்ராஜ் சிங் சவுகான்

6. நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரம் - நிர்மலா சீதாராமன்

7. வெளிவிவகாரத்துறை- ஜெய்சங்கர்

இதையும் படிக்க: சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?

8. வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம் மற்றும் மின்துறை - மனோகர் லால்

9. கனரக தொழில்துறை, எஃகு துறை- HD குமாரசாமி

10. வர்த்தகம் மற்றும் தொழில்துறை- பியூஸ் கோயல்

11. கல்வி - தர்மேந்திர பிரதான்

12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை - ஸ்ரீஜிதன் ராம் மஞ்சி

13. பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் - ராஜீவ் ரஞ்சன் சிங்

14. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை - சர்பானந்தா சோனாவால்

15. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் - வீரேந்திர குமார்

16. விமானப் போக்குவரத்து - கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு

17. நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநிநோயகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - பிரகலாத் ஜோஷி

18. பழங்குடியினர் நலத்துறை - ஸ்ரீஜுவல் ஓரம்

19. ஜவுளித்துறை - கிரிராஜ் சிங்

20. ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் - அஷ்விணி வைஷ்ணவ்

21. தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய முன்னேற்றம் - ஜோதிராதித்ய சிந்தியா

22. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் - பூபேந்தர் யாதவ்

23. கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை - கஜேந்திர சிங்

24. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - அன்னப்பூர்ணா தேவி

25. நாடாளுமன்ற விவகாரம் சிறுபான்மையினர் நலத்துறை - கிரண் ரிஜிஜூ

26. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு - ஹர்தீப் சிங் பூரி

27. தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை - மண்சுக் மாண்டவியா

28. நிலக்கரி மற்றும் சுரங்கம் - கிஷண் ரெட்டி

29. உணவு பதப்படுத்தும் தொழில் துறை- சிராக் பாஸ்வான்

30. ஜல் சக்தி துறை- சி.ஆர்.பாட்டீல்

இதையும் படிக்க: டெஸ்லா குழுவின் தலைவர்! எலான் மஸ்க்கே பாராட்டிய உலகின் கவனம்ஈர்த்த தமிழர்! யார்இந்த அசோக் எல்லுசாமி?