இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி சவுதி அரேபிய நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் டாலரை, எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் இந்தியா முதலீடு செய்யும் என்று கூறினார். சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில், உலகளவில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.