PM Modi PT Web
இந்தியா

"மனுதாரரின் மொழியில் தீர்ப்பு": நீதித்துறைக்கு பிரதமர் மோடி புகழாரம்

டெல்லியில் நடந்த சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்சநீதிமன்றத்திற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

PT WEB

டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டினை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள விக்யான் பவன் அரங்கில், 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்திய பார் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டினை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் சமூகம் மிகவும் முக்கியமான பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். சுதந்திர போராட்ட இயக்கத்தில் இணைவதற்காக, பல வழக்கறிஞர்கள் தங்கள் பணியை விட்டுவிட்டு வந்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றிக்காட்டும் நம் நோக்கத்திற்கு, வலிமையான மற்றும் சுதந்திரமான நீதித்துறை இருக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களாக நீதித்துறையினர் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மனுதாரரின் மொழியில் தீர்ப்புகளை வழங்க வகை செய்துள்ள உச்சநீதிமன்றத்திற்குபாராட்டு தெரிவித்தார்.