இந்தியா

தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார் பிரதமர் மோடி

தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார் பிரதமர் மோடி

webteam

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

செங்கோட்டையில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்னதாக, மகாத்மா காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2022 ஆம் ஆண்டுக்குள் சுதந்திர இந்தியாவின் கனவுகள் நிறைவேறும் என்றும், புதிய இந்தியா உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அனைவரும் சமம் என்று கூறிய பிரதமர், சிறியவர், பெரியவர் என்ற பேதம் கிடையாது என்று தெரிவித்தார்.

சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை சுதந்திர தின நிகழ்வு காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனையளிப்பதாகவும், ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள் என்று மோடி கூறினார்.