பிரதமர் மோடி பெற்ற விருதுகள் pt web
இந்தியா

பிரதமருக்கு நைஜீரியாவின் உயரிய விருது.. இதற்கு முன் பிரதமர் பெற்ற உலக நாடுகளின் விருதுகள் என்னென்ன?

பிரதமர் மோடி நைஜீரியாவின் உயர் விருதை பெற்றுள்ளார். இதற்கு முன் அவர் பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவை குறித்த ஒரு மீள் பார்வை..

PT WEB

பிரதமர் மோடி இதற்கு முன் கடந்த 8 ஆண்டுகளில் 16 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் உயரிய விருதான கிங் அப்துல்அஜீஸ் சாஷ் விருதை பிரதமர் மோடி பெற்றார்.

2016இல் ஆப்கானிஸ்தான் நாட்டில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அமீர் அமானுல்லாகான் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

பாலஸ்தீன்

2018இல் பாலஸ்தீனத்தின் கிராண்டு காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச அமைதிக்காக பாடுபட்டதற்காக தென்கொரிய அரசு சியோல் பீஸ் பிரைஸ் விருதை பிரதமருக்கு வழங்கி கவுரவித்தது.

2019ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் சையத் விருதை பிரதமருக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது.

அதே ஆண்டில் (2019) ரஷ்யாவின் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

பஹ்ரைன் நாடும் கிங் ஹமத் ஆர்டர் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது.

அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான லீஜன் ஆஃப் மெரிட் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2023இல் ஃபிஜி நாட்டின் கம்பேனியன் ஆஃப் ஆர்டர் விருதும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.

பாப்புவா நியூ கினி

பாப்புவா நியூ கினி நாடு தனது உயரிய ஆர்டர் ஆஃப் லோகோஹு விருதை 2023ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு வழங்கச் சிறப்பித்தது.

இதேபோல எகிப்தின் ஆர்டர் ஆஃப் நைல் விருது, பிரான்சின் லீஜன் ஆஃப் ஆனர் விருது, கிரீஸின் ஆர்டர் ஆஃப் ஆனர் ஆகிய விருதுகள் கடந்தாண்டு (2023) பிரதமருக்கு வழங்கப்பட்டன.

பூடான் நாட்டின் ஆர்டர் ஆஃப் ட்ரக் கியால்போ விருது இந்தாண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. டொமினிகா நாடும் தனது உயரிய அவார்ட் ஆஃப் ஆனர் விருதை பிரதமருக்கு வழங்கியிருந்தது.

தற்போது நைஜீரிய நாட்டின் உயரிய விருதும் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துதல், உலக சமாதானம் உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இவை தவிர ஐநா விருதுகளும் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட தனியார் அமைப்புகளின் விருதுகளும் ஏற்கெனவே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன.