அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஜி-7 உறுப்பினர்களாக உள்ளன. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் இத்தாலிக்குச் செல்லவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஜி-7 மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாதம் கசகஸ்தானில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளது.