இந்தியா

“நமது பாதுகாப்பு வீரர்களை சந்தேகிப்பதா ?” - பிரதமர் மோடி ஆவேசம்

“நமது பாதுகாப்பு வீரர்களை சந்தேகிப்பதா ?” - பிரதமர் மோடி ஆவேசம்

webteam

பாதுகாப்புப்படை வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் எதிர்க்கட்சிகள் ஆதாரங்கள் கேட்பதாக பிரதமர் மோடி கடுமையாக பேசியுள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதல் உண்மையில்லை என்று, பல சர்வதேச ஊடகங்கள் தெரிவித்ததால், தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. 

இதில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்பது, பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும் எனத் தெரிவித்தார். தேசம் முழுமையும் ஒரே குரலில் பேசும்போது, 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கூடி தன்னை விமர்சித்தார்கள் என்றும், தமக்கு எதிராக மிகப்பெரிய சதி செய்வதாகவும் தெரிவித்தார். 

இது புதிய இந்தியா என்றும், வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறினார். வீரர்கள் இறந்தால் அமைதியாக இருக்க மாட்டோம் எனவும் ஆவேசத்துடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.