மானியம் மற்றும் இலவச கலாசாரம் இந்திய அரசியலின் மோசமான கோளாறாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
உஜ்வல் பாரத் இயக்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மின்சார தொகுப்புக்கு பல்வேறு மாநிலங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்திருக்கும் செய்தியை அறிந்தால் மக்கள் ஆச்சரியமடைவர். மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களுக்கு மாநிலங்கள் வைத்துள்ள பாக்கியால், மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. சாமானிய மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும்போதும்கூட, மாநிலங்கள் செலுத்த மறுப்பது வியப்பாக இருக்கிறது.
மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருக்கிறது. அனைவருக்கும் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்ய, மாநிலங்கள் கட்டண பாக்கியை செலுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.