இந்தியா

கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல்... டெல்லி துணை முதல்வருக்கு பிளாஸ்மா சிகிச்சை

கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல்... டெல்லி துணை முதல்வருக்கு பிளாஸ்மா சிகிச்சை

sharpana

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த 14 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் கடந்த 23 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சலும் சேர்ந்து வந்ததால், பின்பு டெல்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவருக்கு அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த டெல்லி அமைச்சர்களில் மணிஷ் சிசோடியா இரண்டாவது அமைச்சர் ஆவார். இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனா தொற்றில் ஆறாவது மாநிலமாக திகழ்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 48 வயதாகும் மணிஷ் சிசோடியா கடுமையாக களப்பணியாற்றியதாலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.