பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து ஸ்ரீநகரில் கொரோனா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்காக விமானம் மூலமாக பிளாஸ்மா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா, பெங்களூரிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ பயணிகள் விமானத்தின் மூலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் இணைப்பு விமானம் வழியாக ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டன. டெல்லியில் போக்குவரத்து நேரம் உட்பட எட்டு மணி நேரத்தில் பிளாஸ்மா கொண்டுசெல்லப்பட்டது.
ஸ்ரீநகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 61 வயது பெண்ணும், ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தில் 62 வயதான ஆண் நோயாளிக்கும் பிளாஸ்மா தானம் வழங்கபட்டதாக பெங்களூரு எச்.சி.ஜி மருத்துவமனையின் மருத்துவர் கூறினார்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மிதமான, கடுமையான மற்றும் மோசமான நோய்வாய்ப்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த அங்கீகாரம் அளித்தது, அவை முறையே 100%, 80% மற்றும் 60% வரை முடிவுகளைத் தரும் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.