பினராயி விஜயன் pt web
இந்தியா

“I.N.D.I.A கூட்டணியில் உள்ள இடது சாரிகளை எதிர்த்து ராகுல்காந்தி போட்டியிடுவது ஏன்?” - பினராயி விஜயன்

“பாஜகவை எதிர்த்து போட்டியிடாமல், I.N.D.I.A கூட்டணியில் உள்ள இடது சாரிகளை எதிர்த்து ராகுல்காந்தி களமிறங்குவது ஏன்?” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

webteam

I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரள மாநிலத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மீண்டும் களமிறங்கும் வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வயநாட்டில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பினராயி விஜயன், I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிக்கு எதிராகவே ராகுல்காந்தி களமிறங்குவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.

rahul gandhi

பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில், ராகுல்காந்தி இடது சாரிகளை எதிர்த்து நிற்பது ஏற்புடையதல்ல என்றும் விமர்சித்தார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசாமல் அமைதி காத்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் ராகுலின் இரட்டை வேடம் வெளிப்பட்டு விட்டதாகவும் விமர்சித்தார்.