இந்தியா

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். போர் விமான புகைப்படம் வெளியீடு!

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். போர் விமான புகைப்படம் வெளியீடு!

webteam

இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானத்தின் புகைப்படம் இன்று வெளியிடப்பட்டன.

புல்வாமா தற்கொலை படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலை நடத்தியது. இதனால் இந்தியா முழுவதும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. இதற்கு பதி லடி கொடுக்க நினைத்த இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த சில நாட்களுக்கு முன் எல்லையை ஒட்டிய பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கர வாத முகாமில் குண்டு வீசியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் போர்விமானம் நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்தது. எப் 16 ரக விமானமான அதை, இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தன. முதலில் அதை பாகிஸ்தான் மறு த்து வந்தது. 

அது இந்திய விமானத்தின் பாகம் என சமூகவலைத் தளங்களில் செய்தி பரவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, அது பாகிஸ்தானின் எப் 16 ரக போர்விமானம்தான் என்பதற்கான புகைப்படமும் அதை உறுதிப்படுத்தும் விதமாக எப்16 ரக விமானத்தின் இன்ஜின் வடிவமைப்பு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.