இந்தியா

5 வங்கிகளுடன் பி.எஃப். அமைப்பு ஒப்பந்தம்

5 வங்கிகளுடன் பி.எஃப். அமைப்பு ஒப்பந்தம்

webteam

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப். பணத்தை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க 5 வங்கிகளுடன் ஈபிஎஃப்ஓ அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. 

பாங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி., ஆக்ஸிஸ் மற்றும் கோட்டக் மகேந்திரா வங்கி ஆகியவை பி.எஃப். பணத்தை வசூலிப்பதுடன், பணத்தை திரும்பப் பெறும் சந்தாதாரர்களுக்கு சேவை அளிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம் வங்கிகளின் உதவிகளின் வாயிலாக ஈபிஎஃப்ஓ அமைப்பு தனது உறுப்பினர்களுக்குப் பணத்தை அனுப்புவதையும் தாண்டி முதலீட்டுகளைக் கவனித்துக் கொள்ளவும் உதவி செய்ய உள்ளது. மேலும் நிறுவனங்கள் இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், இவ்வங்கிகளின் வாயிலாக ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் நேரடியாகப் பணத்தை வைப்புச் செய்யலாம். அதுவும் இணைய வங்கி வாயிலாகவே செய்து விடலாம் என ஈபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈபிஎஃப்ஓ சேவை சிறப்பாக இருக்க மேலும் 7 வங்கிகளுடன் கூட்டணி அமைக்கத் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.