இந்தியா

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வர வலியுறுத்தல் - பெட்ரோலியத்துறை

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வர வலியுறுத்தல் - பெட்ரோலியத்துறை

webteam

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய சுங்க வரி மற்றும் மதிப்புக்‍கூட்டு வரி ஆகிய இரு வரி விதிப்புகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே சீரான வரி வழிமுறைகள் இருக்க வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிப்பதன் மூலம் மத்திய அரசுக்‍கு கிடைக்‍கும் வரி வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்‍கு வழங்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.