இந்தியா

விவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி

விவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி

webteam

பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி தம்பதிக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் ஷீனா போரா கொலை வழக்கு ஆகிய இரண்டிலும் தொடர்பு உடையவர்கள் பீட்டர்-இந்திரானி முகர்ஜி தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்கள் இருவரும் 2015ஆம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது மும்பையிலுள்ள சிறையில் உள்ளனர்.

இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் இருந்து விவகாரத்து கோரி கடந்த ஆண்டு மும்பையிலுள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய விரும்புவதாக தெரிவித்திருந்தனர். அத்துடன் அவர்களின் சொத்துகளை இருவரும் பிரிப்பது தொடர்பான விவரங்களையும் மனுவுடன் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவகாரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு அடிப்படையே அன்று இந்திராணி அளித்த வாக்குமூலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.