இந்தியா

உத்தரப்பிரதேசம் : ராவணனை ‘நாயகனாக, தலைவனாக’ வழிபடும் மக்கள்!

உத்தரப்பிரதேசம் : ராவணனை ‘நாயகனாக, தலைவனாக’ வழிபடும் மக்கள்!

EllusamyKarthik

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் ராவணனை நாயகனாகவும் தலைவனாகவும் கொண்டாடி வருகின்றனர். அப்பகுதி மக்கள் ராவணனே தங்கள் கடவுள் என்று வழிபடுகின்றனர். 

பிஷ்ராக் என்ற இடத்தில் உள்ள கோயிலில் ராவணனுக்கும் அவரது மனைவி மண்டோதரிக்கும் தனி சன்னதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். தங்கள் பகுதியில்தான் ராவணன் பிறந்து வளர்ந்ததாக நம்பும் அவர்கள், ராவணனே தங்கள் தலைவன் - தங்கள் நாயகன் என்கின்றனர். 

வட மாநிலங்களில் நவராத்திரி விழாவில் ராவணனை ராமன் அழிப்பதாக கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில், ராவணன் அழிக்கப்பட்ட விஜயதசமி நாளை துக்க நாளாக கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.