இந்தியா

மக்கள் எங்களுக்கு வாக்களித்தது ஏன்? - பிரதமர் மோடி பேச்சு

மக்கள் எங்களுக்கு வாக்களித்தது ஏன்? - பிரதமர் மோடி பேச்சு

Veeramani

வளர்ச்சியை விரும்பியே மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் பிரதமர் மோடி அங்கு 2 சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தேர்தல் வெற்றியை ஒட்டி நடைபெற்ற 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடந்த வெற்றிப்பேரணியை பிரதமர் பார்வையிட்டார்.

இதன்பின் அகமதாபாத்தில் சுமார் ஒரு லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர், ஜனநாயக நாட்டில் வளர்ச்சிப்பணிகளே தங்கள் பிரதிநிதிகளின் பிரதான செயல்பாடாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பதாக தெரிவித்தார். இந்தியா 75ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இத்தருணத்தில் மகாத்மா காந்தி கண்ட கிராமப்புற வளர்ச்சி என்ற கனவை நிறைவேற்ற தங்கள் அரசு பாடுபடுவதாக தெரிவித்தார்.



பிரதமர் தனது பயணத்தின் போது சோம்நாத் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் சோம்நாத் கோயிலுக்கு தங்க தகடு பொருத்த முடிவெடுக்கப்பட்டது. புகழ் பெற்ற சோம்நாத் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக பிரதமர் மோடி உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தனது முதல் நாள் பயணத்தின் நிறைவாக காந்தி நகரின் புறநகர் பகுதியில் தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டிற்கு சென்றார். அங்கு வசித்து வரும் தாய் ஹீராபாயிடம் நலம் விசாரித்த பிரதமர், அவரிடம் ஆசியும் பெற்றார். பின்னர் தாயுடன் பிரதமர் உணவுண்டார்.