விஜய் pt web
இந்தியா

இந்திய அளவில் அதிகளவில் வருமான வரி செலுத்திய பிரபலங்கள்.. பாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த நடிகர் விஜய்!

இந்திய பிரபலங்கள்ல அதிகளவு வருமானவரி செலுத்தியதில் முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய் உள்ளார். அவர் எவ்வளவு வருமானவரி செலுத்தியுள்ளார், அதிக வரி கட்டிய மற்ற பிரபலங்கள் யார்?

PT WEB

தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபிஸ் வசூலில் நம்பர் ஒன்றாக இருப்பவர் நடிகர் விஜய்.. இப்போது அதிகளவு வருமானவரி செலுத்தியதில் 2ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு துறை பிரபலங்கள் கடந்த ஆண்டு வருமானவரி செலுத்திய விவரங்கள அமெரிக்க இதழான ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ளது. இதில், 2023-24ஆம் நிதியாண்டில் அதிகளவாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் 92 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி

நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வருமானவரி செலுத்திருப்பதாகவும், அவர் அதிக வருமானவரி செலுத்திய பிரபலங்களில் 2ஆவது இடத்தை பிடித்திருப்பதாகவும் ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது.

சல்மான் கான் 75 கோடி ரூபாயும், அமிதாப் பச்சன் 71 கோடி ரூபாயும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாயும் வருமானவரி செலுத்தியுள்ளனறாம்.

நடிகர் அஜய் தேவ்கன் 42 கோடி ரூபாயும், எம்.எஸ். தோனி 38 கோடி ரூபாயும், நடிகர் ரன்பீர் கபூர் 36 கோடி ரூபாயும் வருமான வரி செலுத்தியிருப்பதாக ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 28 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தியுள்ளனராம். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் ஷர்மா 26 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தியுள்ளாராம்.

சச்சின்

இதுதவிர, சவுரவ் கங்குலி, கரீனா கபூர், ஷாகித் கபூர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானவரி செலுத்தியிருப்பதாக ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது.