இந்தியா

"கொரோனாவை எதிர்க்க தாராளமாக நிதியுதவி கொடுங்கள்" பிரதமர் மோடி !

"கொரோனாவை எதிர்க்க தாராளமாக நிதியுதவி கொடுங்கள்" பிரதமர் மோடி !

jagadeesh

கொரோனாவை எதிர்கொள்ள பொது மக்கள் தாராளமாக நிதியுதவி அளியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "பொது மக்கள் வழங்கும் சிறிய அளவிலான நிதி, பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற உதவும். வளமான இந்தியாவை உருவாக்க வருங்கால சந்ததியினருக்கு இது உதவும். மக்கள் தாங்கள் விரும்பும் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நிதி எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பேரிடருக்கு நிச்சயம் உதவும்" என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவாத் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதியளிக்க விரும்புவோர் - வங்கி கணக்கு விவரங்கள்