இந்தியா

வெட்டுக்கிளிக்கான முன்னெச்சரிக்கை: புது ஐடியாவை கையிலெடுத்த மக்கள் - வீடியோ

வெட்டுக்கிளிக்கான முன்னெச்சரிக்கை: புது ஐடியாவை கையிலெடுத்த மக்கள் - வீடியோ

webteam

கான்பூர் அருகே வெட்டுக்கிளிகளை விரட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வயலில் பாத்திரங்கள் மற்றும் டிரம்ஸை, குச்சி கொண்டு மக்கள் அடிக்கின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருக்கும் என ஐநா எச்சரித்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், ஒடிசா உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியது.

இதனையடுத்து மத்தியப் பிரதேசத்தின் சாத்னா, குவாலியர், சீதி, ராஜ்கர், பைதுல், தேவாஸ், அகர் மால்வா ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே வெட்டுக்கிளிகளை விரட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வயலில் பாத்திரங்கள் மற்றும் டிரம்ஸை, குச்சி கொண்டு மக்கள் அடிக்கின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.