ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள புல்லா மற்றும் கொமெரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த மர்ம நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எலுரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 22 பேர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எலுரு பகுதியில் மர்ம நோய் பரவியுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் வலிப்பு, வாந்தி, மயக்கம் மாதிரியான அறிகுறிகள் இருந்துள்ளன. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் ஸ்ரீனிவாஸ். இதனிடையே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாமென சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.