இந்தியா

லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சி : இந்திய - சீன ராணுவ படைகள் விலகல் ?

லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சி : இந்திய - சீன ராணுவ படைகள் விலகல் ?

webteam

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இந்திய - சீன இருநாட்டு படையினரும் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அத்துடன் லடாக் எல்லையில் சீனா தங்கள் ராணுவத்தினரை குவித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்திய தரப்பிலிருந்தும் ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிய வந்தது. இந்நிலையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இருநாட்டு ராணுவத்தினரும் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் மற்றும் இராணுவப் படைவீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததாக இன்று அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி, பிரதமரிடம் விளக்கமளித்தனர். இதையடுத்து வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்படும் எனப்பட்டது.

இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதே அளவில் சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.