செல்போன் வாயிலாக பணப் பரிவர்த்தனைக் கொண்டிருக்கும் செயலிகளில் ஒன்றான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு (paytm payment bank) பிப்ரவரி 29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. Paytmக்கு KYC தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் வாலட் வணிகத்தில் 2022க்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை எனவும், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்புகளைத் தாண்டி ஒரே பான் எண்ணில் பல பேடிஎம் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தவுடன் இந்திய ரிசர்வ வங்கி உடனடியாக தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பேடிஎம் வாலட் வணிகத்தை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வாங்க தயாராக இருப்பதாகவும், அதை பேடிஎம் மறுத்திருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், Paytm-ன் வாலட் வணிகத்தை வாங்குவதற்கு Jio Financial Services எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை" என ரிலையன்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. முன்னதாக, Paytm-ன் வாலட் வணிகத்தை வாங்குவதில் முகேஷ் அம்பானி நிறுவனம் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர், Jio Financial Services Ltd (JFS) பங்குகள் 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.