ரத்தன் டாடா எக்ஸ் தளம்
இந்தியா

ரத்தன் டாடா மறைவு | சர்ச்சைக்குரிய இரங்கல் பதிவு.. எழுந்த எதிர்ப்பு... உடனே நீக்கிய பேடிஎம் சி.இ.ஓ.!

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு குறித்து சர்ச்சைக்குரிய பதிவிட்ட பேடிஎம் சி.இ.ஓ., பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் அதை நீக்கிவிட்டார்.

Prakash J

உலகமே வியந்த இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் அவர் காலமானதைத் தொடர்ந்து, அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மாவும் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ரத்தன் டாடா

காரணம் அவர் தனது எக்ஸ் தளத்தில், “அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர் இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்புகொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: PAK Vs ENG|ஒரே டெஸ்ட் போட்டி.. கதகளி ஆடிய இரு இங்கிலாந்து வீரர்கள்.. பல சாதனைகள் படைத்த ஹாரி புரூக்!

இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “ஊடக வெளிச்சத்துக்காக இப்படி பதிவிடுகிறீர்கள்” என ஒருவரும், ”இது பொருத்தமற்றது” என மற்றொருவரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

முன்னதாக, ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவ்வரசின் சார்பில் அவருக்கு, இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதையும் படிக்க: கண்ணிவெடி புதைப்பு.. கூடுதல் ராணுவம்! தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!